Saturday, June 9, 2012

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!


என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!



என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!




Wednesday, April 11, 2012

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை uruga வைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக்கனிய வைத்தாய் ......

Saturday, March 17, 2012

இன்னும் என்ன தோழா!!!



மனம் நினைத்தால்

அதை தினம் நினைத்தால்

நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!

தொடு வானம் இனி தொடும் தூரம்

பல கைகளை சேர்க்கலாம்



விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்

அதில் கள்ளிப்பூ முளைக்குமா?

நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்

தந்த வீரங்கள் மறக்குமா?



ஒரே மனம் !! ஒரே குணம் !! ஒரே தடம் !!

எதிர் காலத்தில்..

அதே பலம் !! அதே திடம் !!அகம் புறம் நம் தேகத்தில்..

கழுதோடும் ஒரு ஆயுதத்தை

தினம் கணங்களில் சுமகிரோம்

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

எங்கள் மொழியினில் சுவைகிரோம்

பனி மூட்டம் வந்து படித்தென்ன

சுடும் பகலவம் மறையுமா?

அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்

எங்கள் இரு விழி மூடுமா?

Thursday, January 26, 2012

தாய் மண்ணே வணக்கம்....



தாயவள் போலொரு ஜீவனில்லை
அவள் காலடி போல் சொர்க்கம் வேறில்லை
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்,
தாய் மண்ணே வணக்கம்.