Tuesday, October 18, 2011

விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

வேரோடு வேர்வை ஊற்றி, காதல் என்றும் வென்றுவிடும்

வெறியோடு ஓடும்போது, தடையை உடைத்து விடும்


கடல் நீரை தேக்கும்போது, உப்பாய் தானே மாறிவிடும்

கண்ணீரை தேக்கும் காதல், முத்தாய் மாற்றிவிடும்.....



காதல் கேட்டுகொண்டு வருமா

தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா???


காதல் காட்டு செடி போலே

கட்டளைகள் போடும்போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா???



புலி வாழும் குகைக்குளே

கிளி வாழும் வீரத்தை மனதோடு தந்திடுமே காதல் தான்..,



விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது

ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

மலை ஏறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது

மனதோடு காதல் வந்தால் மனிதா தடை ஏது????

1 comment: